சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் சாலையோர சிறு வியாபாரிகளின் கடைகளை அடாவடியாக அகற்றிய மாநகராட்சி ஊழியர்கள் .... சாலையில் அமர்ந்து மாம்பழம் விற்ற மூதாட்டியின் மாம்பழங்களை குப்பை வண்டியில் அள்ளிச் சென்றதால் மூதாட்டி கண்ணீர் ...
செய்திகள்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் சாலையோர சிறு வியாபாரிகளின் கடைகளை அடாவடியாக அகற்றிய மாநகராட்சி ஊழியர்கள் .... சாலையில் அமர்ந்து மாம்பழம் விற்ற மூதாட்டியின் மாம்பழங்களை குப்பை வண்டியில் அள்ளிச் சென்றதால் மூதாட்டி கண்ணீர் ...

The News Outlook
🕒 7 ஜூலை, 2026, 10:57 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் சாலையோர சிறு வியாபாரிகளின் கடைகளை அடாவடியாக அகற்றிய மாநகராட்சி ஊழியர்கள் .... சாலையில் அமர்ந்து மாம்பழம் விற்ற  மூதாட்டியின்  மாம்பழங்களை குப்பை வண்டியில் அள்ளிச் சென்றதால் மூதாட்டி கண்ணீர் ...

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் சாலையோர சிறு வியாபாரிகளின் கடைகளை அடாவடியாக அகற்றிய மாநகராட்சி ஊழியர்கள் .... சாலையில் அமர்ந்து மாம்பழம் விற்ற மூதாட்டியின் மாம்பழங்களை குப்பை வண்டியில் அள்ளிச் சென்றதால் மூதாட்டி கண்ணீர் ... விருதுநகர் மாவட்டம் சிவகாசி சிவன் கோயில் முன்பு சாலையோரங்களில் சிறு வியாபாரிகள் தள்ளுவண்டி மூலமும் , இருசக்கர வாகனம் மூலமும், சாலை ஓரத்தில் அமர்ந்தும் பழ வியாபாரம் செய்து வருகின்றனர் . மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் கடை வைக்க கூடாது என வியாபாரிகளிடம் மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் இன்று வழக்கம் போல சிறு வியாபாரிகள் பழ வியாபாரம் செய்து வந்த நிலையில் மாநகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கடைகளை அப்புறப்படுத்தினர்.மேலும் ஒரு மூதாட்டி சாலையில் அமர்ந்து மாம்பழ வியாபாரம் செய்த நிலையில் அவரது மாம்பழங்களை கூடையுடன் குப்பை வண்டியில் எடுத்துச் சென்ற நிலையில் அந்த மூதாட்டி அழுது கொண்டே அந்த வாகனத்தில் பின்னால் சென்றது காண்போரையும் வேதனை அடைய செய்தது .மேலும் வியாபாரம் செய்த வியாபாரிகளின் தள்ளு வண்டியை அடாவடியாக குப்பை வண்டியில் ஏற்றி சென்றதற்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔