சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/சட்டவிரோதமாக பட்டாசுகள் பதுக்கல்? தவெக நிர்வாகி உள்பட 2 பேர் கைது – ரூ.4.30 லட்சம் பட்டாசுகள் பறிமுதல்
செய்திகள்

சட்டவிரோதமாக பட்டாசுகள் பதுக்கல்? தவெக நிர்வாகி உள்பட 2 பேர் கைது – ரூ.4.30 லட்சம் பட்டாசுகள் பறிமுதல்

The News Outlook
🕒 8 ஆக., 2026, 03:11 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
சட்டவிரோதமாக பட்டாசுகள் பதுக்கல்? தவெக நிர்வாகி உள்பட 2 பேர் கைது – ரூ.4.30 லட்சம் பட்டாசுகள் பறிமுதல்

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதியின்றி பட்டாசுகள் தயாரித்தல் மற்றும் பதுக்கி வைப்பதை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அனுப்பன்குளம் பகுதியில் போலீசார் நடத்திய சோதனையில், அனுமதியின்றி பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்ததாக கூறப்படும் 2 பேரை கைது செய்துள்ளனர்.

அனுப்பன்குளம் பகுதியில் உள்ள பட்டாசு கடை அருகே போலீசார் சோதனை மேற்கொண்டபோது, அங்கு தனியாக குடோன் அமைத்து பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்தில் இருந்த த.வெ.க. தென்கிழக்கு ஒன்றிய இணைச் செயலாளர் விவேக் மற்றும் மனோஜ்குமார் ஆகிய இருவரையும் சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து குடோனில் சோதனை மேற்கொண்ட போலீசார், சுமார் 500 பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளை பறிமுதல் செய்தனர். அவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ.4 லட்சத்து 30 ஆயிரம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

சிவகாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பட்டாசு தயாரிப்பு மற்றும் சேமிப்பு தொடர்பாக விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் போலீசார் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், அனுப்பன்குளத்தில் நடைபெற்ற இந்த சோதனையும், இருவர் கைது செய்யப்பட்ட சம்பவமும் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔