Settings

முகப்பு/செய்திகள்/உயர வளர்ச்சி குறைந்தோர் மனித சங்கிலி போராட்டம்
செய்திகள்

உயர வளர்ச்சி குறைந்தோர் மனித சங்கிலி போராட்டம்

🕒 27 அக்., 2026, 05:02 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
உயர வளர்ச்சி குறைந்தோர் மனித சங்கிலி போராட்டம்
✨

AI Highlights

  • •உயர வளர்ச்சி குறைந்தோர் மனித சங்கிலி போராட்டம்

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போடு உரிமைகளுக்கான சங்கத்தின் உயரம் வளர்ச்சி தடைப்பட்ட மாற்றுத்திறனாளிகள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம் அருகில் கோரிக்கைகளை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் மாவட்ட அமைப்பு குழு தலைவர் இ.முருகன் தலைமை தாங்கினார், துணைத் தலைவர் ஆர்.கார்த்திகேயன், அமைப்பு குழு செயலாளர் கே.திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வைத்தனர். மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பொருளாளர் எம்.யுகந்தி ஆகியோர் கலந்து கொண்டு உயரம் வளர்ச்சி தடைப்பட்ட மாற்றுத்திறனாளிகளை கடும் ஊனம் உள்ளவர்களாக அறிவித்து அரசின் அனைத்து திட்டங்களிலும் முன்னுரிமை வழங்க வேண்டும், அரசு இலவச வீடுகள் வழங்க வேண்டும், மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையை ரூபாய் 6000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும், அனைத்து அரசு பேருந்துகளிலும் தாழ்வான படிக்கட்டுகள் அமைக்கவும், முழுவதும் இலவச பயணம் செய்யவும் சலுகை வழங்க வேண்டும், கல்வி, வேலைவாய்ப்பில் சிறப்பு திட்டங்களை உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். போராட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர்கள் பி.முருகன், பி.அய்யனார், துணைச் செயலாளர்கள் எம்.மும்மூர்த்தி, எஸ்.செல்வி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியவாறு ஒருவருக்கொருவர் கைகோர்த்து நின்றபடி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔