Settings

முகப்பு/செய்திகள்/துப்பாக்கிகள் எப்படி இயங்குகின்றன? மாணவர்களை வியக்க வைத்த காவல்துறை கண்காட்சி!
செய்திகள்

துப்பாக்கிகள் எப்படி இயங்குகின்றன? மாணவர்களை வியக்க வைத்த காவல்துறை கண்காட்சி!

🕒 15 அக்., 2026, 07:04 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
துப்பாக்கிகள் எப்படி இயங்குகின்றன? மாணவர்களை வியக்க வைத்த காவல்துறை கண்காட்சி!
✨

AI Highlights

  • •காவலர் வீரவணக்க தினத்தை முன்னிட்டு நெல்லையில் நவீன ஆயுதங்கள் கண்காட்சி: அரசுப் பள்ளி மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

நாடு முழுவதும் ஆண்டுதோறும் அக்டோபர் 21-ஆம் தேதி காவலர் வீரவணக்க தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது இதனை முன்னிட்டு, காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான நல்லுறவை மேம்படுத்தும் வகையில் ஒரு வார கால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்ததிட்டமிடப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, நெல்லை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்காகக் காவல்துறையின் நவீன துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களின் கண்காட்சி நடத்தப்படுகிறது .இந்த கண்காட்சியின் தொடக்கநிகழ்வில் மாநகர காவல் ஆணையர் தேஷ்முக்சேகர்சஞ்சய் கலந்து கொண்டு கொடி அசைத்து கண்காட்சியை தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். தொடர்ந்து மாணவ மாணவிகள் கண்காட்சியை பார்வையிட்டனர் அவர்களுக்கு துப்பாக்கி பயன்படுத்தும் முறை, துப்பாக்கின் வகை ஆகியவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து மாநகர காவல் ஆணையாளர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அக்டோபர் 21 அன்று காவலர் வீரவணக்க தினம் நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது காவல்துறையின் அர்ப்பணிப்பு, நாட்டுக்கும் பொதுமக்களுக்கும் அவர்கள் ஆற்றி வரும் தன்னலமற்ற பணிகள் குறித்து இளைய தலைமுறையினரிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே இந்நிகழ்வின் முக்கிய நோக்கமாகும். தமிழக காவல்துறையில் பயன்பாட்டில் உள்ள அதிநவீன ஆயுதங்கள் இந்தக் கண்காட்சியில் பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன[. ஆயுதங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை மாணவர்கள் மிகுந்த ஆச்சரியத்துடனும் ஆர்வத்துடனும் பார்வையிட்டனர். இதன் மூலம் மாணவர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே ஒரு நல்லுறவு ஏற்படும். கண்காட்சியைத் தொடர்ந்து, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடையே பல்வேறு விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்குப் பரிசுகளும் வழங்கப்பட உள்ளன என்று தெரிவித்தார். இந்த நிகழ்வில் மாநகர காவல் துணை ஆணையாளர் சரவணன் மற்றும் காவல்துறை அதிகாரிகள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔