Settings

முகப்பு/செய்திகள்/ஓசூர் வியாபாரி வெறிச்செயல்: நாமக்கல்லில் மனைவி மற்றும் மாமனாரை தாக்கியவர் கைது!
செய்திகள்

ஓசூர் வியாபாரி வெறிச்செயல்: நாமக்கல்லில் மனைவி மற்றும் மாமனாரை தாக்கியவர் கைது!

🕒 19 நவ., 2026, 03:55 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
ஓசூர் வியாபாரி வெறிச்செயல்: நாமக்கல்லில் மனைவி மற்றும் மாமனாரை தாக்கியவர் கைது! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •நாமக்கல்லில் குடும்பத் தகராறு காரணமாக மனைவி பிரியதர்ஷினி மற்றும் மாமனார் செந்தில்குமாரı தாக்கிய ஓசூரைச் சேர்ந்த பரத் என்பவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

நாமக்கல் சந்தைப்பேட்டை புதூர் பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக மனைவி மற்றும் மாமனாரை தாக்கிய கணவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நாமக்கல் சந்தைப்பேட்டை புதூரைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகள் பிரியதர்ஷினி (வயது 30). இவருக்கும், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்த பரத் (30) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லை எனத் தெரிகிறது. ஓசூர் பத்தலப்பள்ளி மார்க்கெட்டில் பரத் கடை நடத்தி வருகிறார்.

இதற்கிடையே, கணவன் - மனைவி இடையே அடிக்கடி குடும்பத் பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த 16-ஆம் தேதியன்று நாமக்கல்லுக்கு வந்திருந்த பிரியதர்ஷினி மற்றும் பரத் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த பரத், தனது மனைவி பிரியதர்ஷினியையும், மாமனார் செந்தில்குமாரையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பிரியதர்ஷினி நாமக்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி, பரத்தைக் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நாமக்கல் கிளைச் சிறையில் அடைத்தனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
தஞ்சாவூரில் மக்கள் அதிகாரம் அமைப்பின் நிர்வாகி மீது தாக்குதல்: 5 பேர் கைது!செய்திகள்

தஞ்சாவூரில் மக்கள் அதிகாரம் அமைப்பின் நிர்வாகி மீது தாக்குதல்: 5 பேர் கைது!

Rajan🕒 நவ. 22
சீர்திருத்தி ஒரு வாரமே ஆன நிலையில் மீண்டும் உடைந்த குடிநீர் குழாய் - கொந்தளிப்பில் பொதுமக்கள்!செய்திகள்

சீர்திருத்தி ஒரு வாரமே ஆன நிலையில் மீண்டும் உடைந்த குடிநீர் குழாய் - கொந்தளிப்பில் பொதுமக்கள்!

Rajan🕒 நவ. 22
தஞ்சை மக்களே கவனம்! உங்கள் மின் குறைகளை தீர்க்க நவ.24-ல் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்!செய்திகள்

தஞ்சை மக்களே கவனம்! உங்கள் மின் குறைகளை தீர்க்க நவ.24-ல் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்!

Rajan🕒 நவ. 22
தஞ்சாவூர் டெல்டா பகுதியில் சம்பா சாகுபடி தீவிரம்: வேளாண் இயக்குனர் முரளிதரன் நேரடி ஆய்வு!செய்திகள்

தஞ்சாவூர் டெல்டா பகுதியில் சம்பா சாகுபடி தீவிரம்: வேளாண் இயக்குனர் முரளிதரன் நேரடி ஆய்வு!

Rajan🕒 நவ. 22
மேகதாது விவகாரம்: முதல்வர் விஜய் மவுனம் ஏன்? - எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்விஅரசியல்

மேகதாது விவகாரம்: முதல்வர் விஜய் மவுனம் ஏன்? - எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி

Rajan🕒 நவ. 22
வால்பாறையில் உலா வந்த கொம்பன் யானை: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!செய்திகள்

வால்பாறையில் உலா வந்த கொம்பன் யானை: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!

S. Ravichandran🕒 நவ. 22
தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!செய்திகள்

தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!

Rajan🕒 நவ. 22
மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்செய்திகள்

மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்

Rajan🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔