Settings

முகப்பு/செய்திகள்/அரசு பேருந்து நடத்துநர் அடித்துக் கொலை: 5 நண்பர்கள் கைது!
செய்திகள்

அரசு பேருந்து நடத்துநர் அடித்துக் கொலை: 5 நண்பர்கள் கைது!

🕒 7 அக்., 2026, 05:59 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
அரசு பேருந்து நடத்துநர் அடித்துக் கொலை: 5 நண்பர்கள் கைது!
✨

AI Highlights

  • •திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் அரசு பேருந்து நடத்துநர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 5 நண்பர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் கீழத்தெருவைச் சேர்ந்த அரசுப் போக்குவரத்துக்கழக பேருந்து நடத்துநர் சிவசுப்பிரமணியன் (51) அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அவரது நண்பர்கள் 5 பேரை வள்ளியூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவசுப்பிரமணியன் ஊருக்கு ஒதுக்குப்புறமான பகுதியில் தனது நண்பர்களுடன் மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட தகராறில் நண்பர்கள் அவரை கட்டையால் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவரை, நண்பர்களே இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு அழைத்து வந்து இறக்கியுள்ளனர். அப்போது, வாகனத்தில் இருந்து விழுந்துவிட்டதாக அவர்கள் குடும்பத்தினரிடம் கூறிவிட்டுச் சென்றுள்ளனர். சிவசுப்பிரமணியனின் முதுகுப் பகுதியில் கட்டையால் தாக்கப்பட்டதற்கான தழும்புகள் இருந்ததைக் கண்ட அவரது மனைவி, உடனடியாக அவரைத் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை பெற்று நள்ளிரவு வீடு திரும்பியுள்ளார். பின்னர் மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டதால், அவரை வள்ளியூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். மேல் சிகிச்சைக்காக நாகர்கோயில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் குறித்து அவரது மனைவி அளித்த புகாரின் பேரில், வள்ளியூர் காவல் நிலைய ஆய்வாளர் சுரேஷ் குமார் தலைமையிலான காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், சிவசுப்பிரமணியனின் நண்பர்களான முத்துக்கிருஷ்ணன் (45), சுதன் (29) உள்ளிட்ட 5 பேரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர். இதற்கிடையில், சிவசுப்பிரமணியன் காயமடைந்த நிலையில் உள்ள வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔