ராமநாதபுரம் அரண்மனை அருகே பெய்த மழையின் காரணமாக பெரிய வேப்பமரம் ஒன்று மின்கம்பியின் மீது சாய்ந்ததில் அப்பகுதியில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
பாண்டிக்கண்மாய் சாமி வடக்குத் தெரு பகுதியில் இந்தச் சம்பவம் நிகழந்துள்ளது. மரம் உயர் அழுத்த மின்பாதையின் (HT line) மீது விழுந்ததால் மின்கம்பிகள் சேதமடைந்தன; இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
மேலும், முறிந்து விழுந்த மரம் முழுவதுமாக சாலையை மரித்ததால் போக்குவரத்துக்கும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் தீயணைப்புத் துறையினர், மின்வாரிய ஊழியர்கள், காவல்துறையினர் மற்றும் ஐந்தாவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ராஜாராம் பாண்டியன் ஆகியோர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மரத்தை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
