Settings

முகப்பு/செய்திகள்/பரமத்தி வேலுாரில் வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு: அனைத்துக் கட்சிகள் ஆலோசனைக் கூட்டம்
செய்திகள்

பரமத்தி வேலுாரில் வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு: அனைத்துக் கட்சிகள் ஆலோசனைக் கூட்டம்

🕒 24 அக்., 2026, 03:49 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
பரமத்தி வேலுாரில் வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு: அனைத்துக் கட்சிகள் ஆலோசனைக் கூட்டம்

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலுார்  சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளைப் பிரித்தல் மற்றும் இடமாற்றம் செய்வது தொடர்பான அனைத்துக் கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது இக்கூட்டம் பரமத்தி வேலுார் சட்டமன்றத் தொகுதி தேர்தல் அலுவலர் காரல் மார்க்ஸ் மற்றும் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலர் கிருஷ்ணவேணி ஆகியோர் தலைமையில், தாலுக்கா அலுவலகத்தில் நடந்தது கூட்டத்தில், வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டுப் பரமத்தி வேலூர் தொகுதி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வாக்குச்சாவடிகளை மறுசீரமைப்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. குறிப்பாக,நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு மேல் வாக்காளர்கள் அதிகம் உள்ள வாக்குச்சாவடிகளை இரண்டாகப் பிரிப்பது, பழுதடைந்த கட்டடங்களில் இயங்கிவரும் வாக்குச்சாவடிகளைப் பொதுமக்களுக்குப் பயன்படும் வகையிலான வேறு பள்ளி அல்லது அரசு கட்டடங்களுக்கு இடமாற்றம் செய்வது, தேவையான இடங்களில் புதிய வாக்குச்சாவடிகளை உருவாக்குவது, வாக்காளர்கள் நீண்ட தூரம் சென்று வாக்களிப்பதைத் தவிர்ப்பதற்கு ஏதுவாக வாக்குச்சாவடி எல்லைகளை மாற்றி அமைப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து தேர்தல் துணை வட்டாட்சியர் பெரியசாமி பேசுகையில், "இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக அரசியல் கட்சியினர் தங்களது ஆலோசனைகளையும் கருத்துகளையும் தெரிவிக்கலாம். பெறப்படும் கருத்துகள் முறையாகப் பரிசீலிக்கப்பட்டு, தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பி வைக்கப்படும்" என்று தெரிவித்தார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔