சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/போதையிலிருந்து விடுதலை! அரசு மருத்துவமனையில் ‘WIN-DEPENDENCE’ முகாம்.
செய்திகள்

போதையிலிருந்து விடுதலை! அரசு மருத்துவமனையில் ‘WIN-DEPENDENCE’ முகாம்.

The News Outlook
🕒 14 ஆக., 2026, 08:47 AM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு
போதையிலிருந்து விடுதலை! அரசு மருத்துவமனையில் ‘WIN-DEPENDENCE’ முகாம்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 80 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மனநலத்துறையின் சார்பாக ஒருங்கிணைந்த போதை மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தில் வைத்து. ‘விடுதலை பெற்றோம்’ (WIN-DEPENDENCE) என்ற தலைப்பில் புத்துணர்வு முகாம் நடைபெற்றது.

இதில் ஏற்கனவே போதை பழக்கத்திற்கு அடிமையாக இருந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டவர்களை ஊக்குவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. போதை பழக்கத்திலிருந்து மீண்டு இன்று சமூதாயத்தில் நல்ல நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கும் பயனார்களை அவர்களது குடும்பத்தினரோடு அழைத்து அவர்களுக்கு புத்துணர்வு கொடுத்து பாராட்டும் பரிசுகளும் வழங்கப்பட்டன. இந்த புத்துணர்வு முகாமை தலைமை தாங்கி மருத்துவக்கல்லூரியின் முதல்வர் மரு.த. ஜெயசிங், அவர்கள் தலைமை உரை ஆற்றினார். மருத்துவமைனையின் துணை கண்காணிப்பாளர் Dr. N. அரவிந்பாபு உள்ளுறை மருத்துவ அதிகாரி Dr.S. வைஷ்ணவி ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிகளை மனநலத்துறை துறைத்தலைவர் மரு. A. காட்சன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். மனநல மருத்துவர்கள் Dr. C. பூங்கொடி, Dr. H.R. சதிஷ் சங்கர் மற்றும் போதை மறுவாழ்வு மையத்தின் செவிலியர்கள் கலந்துகொண்டனர். மேலும் செவிலியர் பள்ளி மாணவிகளுக்கு இந்த நிகழ்ச்சியின் சார்பில் ‘விடுதலை பெற்றோம்’ என்ற தலைப்பில் ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டு , வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன, செவிலியர் பள்ளி மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் நிகழ்த்தி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். போதை பழக்கத்திலிருந்து மீண்டவர்கள் தங்கள் புதிய வாழ்வின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள். இது ஏற்கனவே சிகிச்சை பெற்றுகொண்டிருக்கும் நோயாளிகளை ஊக்குவிக்கும் விதமாக அமைந்தது. விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருக்கும் ஒருங்கிணைந்த போதை மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் கடந்த ஒன்றரை வருடமாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதில் கடந்த பிப்ரவரி 2025ல் இருந்து ஜூலை 2026 வரை சுமார் 5915 வெளிநோயாளிகளும், 523 உள்நோயாளிகளும் பயனடைந்துள்ளனர். இங்கு 20 படுக்கை வசதிகளுடன் 24 மணி நேரமும் கவணிக்கும் வகையில் உள்நோயாளிகள் பிரிவு தனிவளாகத்தில் செயல்பட்டுவருகிறது. மேலும் சிறப்பு உணவு வகைகள் அவர்களுக்கு வழங்கபட்டு வருகிறது. மருத்துவமனை மருத்துவர்களின் தினசரி கவனிப்பு, ஆலோசகர்களின் ஆலோசனைகள், செவிலியர்களின் கண்காணிப்பு மூலமாக அவர்கள் போதை பழக்கத்திலிருந்து மீண்டு இன்று சமூதாயத்தில் நல்ல நிலையில் வாழும் வகையில் இந்த சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔