சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை மற்றும் தசரா பண்டிகையை முன்னிட்டு தொடர்ச்சியாக விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பலரும் குடும்பத்துடன் பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று தங்கள் நேரத்தைச் செலவிட்டு வருகின்றனர். இந்த நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்தபோதிலும், பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. இந்த வெப்பத்தில் இருந்து தங்களைத் தணித்துக் கொள்ளவும், தொடர் விடுமுறையை மகிழ்ச்சியாகக் கொண்டாடவும் நெல்லை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் அம்பாசமுத்திரம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள ப அகத்தியர் அருவியை நோக்கி படையெடுத்து வருகின்றனர். அகத்தியர் அருவியில் ஆண்டு முழுவதும் வற்றாத நீர்வரத்து கொண்ட இயற்கை எழில் கொஞ்சும் இடமாகும் விடுமுறை தினமான இன்று காலை முதலே சிறுவர்கள், பெண்கள், பெரியவர்கள் என ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் அருவிப் பகுதியில் குவிந்து வருகின்றனர் அவர்கள் அருவியில் கொட்டும் மூலிகை நற்குணங்கள் நிறைந்த குளிர்ந்த தண்ணீரில் இறங்கி, அனைவரும் உற்சாகமாகக் குளித்து தங்களது களைப்பைப் போக்கிக் கொண்டனர் பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்படுகிறது
செய்திகள்
தொடர் விடுமுறை எதிரொலி: அகத்தியர் அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!
🕒 20 அக்., 2026, 09:03 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

📸செய்தி புகைப்படங்கள் (Photo Gallery - 4 படங்கள்):
✨
AI Highlights
- •தொடர் விடுமுறையை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அகத்தியர் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குவிகின்றனர். மூலிகை நற்குணங்கள் நிறைந்த நீரில் அவர்கள் உற்சாகக் குளியல்.
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech




