அரியலூர் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் முன்னாள் படை வீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந. மிருணாளினி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 22 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் உறுதியளித்தார்.
தொடர்ந்து, முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் நான்கு பயனாளிகளுக்கு ரூ.39,990 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். இதில் கண்கண்ணாடி நிதியுதவி மற்றும் இரண்டு மகன்களை இராணுவப் பணிக்கு அனுப்பிய அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெற்றோர் ஒருவருக்கு போர்ப்பணி ஊக்க மானியத் தொகையும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலக உதவி இயக்குநர் கர்னல் தி. ஜெயக்குமார் (ஓய்வு) மற்றும் முன்னாள் படைவீரர்கள் பலர் கலந்துகொண்டனர்.

