Settings

முகப்பு/செய்திகள்/ஈரோட்டில் அதிர்ச்சி: மரத்தில் தொங்கிய நபர் உடல் - காவல்துறையினர் தீவிர விசாரணை!
செய்திகள்

ஈரோட்டில் அதிர்ச்சி: மரத்தில் தொங்கிய நபர் உடல் - காவல்துறையினர் தீவிர விசாரணை!

🕒 28 அக்., 2026, 10:47 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
ஈரோட்டில் அதிர்ச்சி: மரத்தில் தொங்கிய நபர் உடல் - காவல்துறையினர் தீவிர விசாரணை!
✨

AI Highlights

  • •ஈரோடு அடுத்த 46 புதூர் வள்ளிகார்டன் பகுதியில் மரத்தில் தூக்கிட்ட நிலையில் 40 வயது மதிக்கத்தக்க நபர் சடலமாக மீட்பு. போலீசார் தீவிர விசாரணை.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

ஈரோடு அடுத்த 46 புதூர் வள்ளிகார்டன் பகுதியில், சாலையோர மரத்தில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தூக்கிட்ட நிலையில் இறந்த கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வள்ளிகார்டன் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள நிலையில், இன்று காலையில் அப்பகுதியில் உள்ள காலி இடத்தில் உள்ள மரத்தில் நபர் ஒருவர் தூக்கிட்டுக்கொண்டதை அப்பகுதி வாசிகள் கண்டுள்ளனர். இதுகுறித்து உடனடியாக தாலுகா காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆய்வாளர் தமிழரசு தலைமையிலான போலீசார், உயிரிழந்தவரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்தவர் யார் என்ற விவரம் உடனடியாகத் தெரியவில்லை. அவர் எதற்காக இந்த விபரீத முடிவை எடுத்தார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔