சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதையில் வாகனங்களை துரத்திய யானை அவ்வழியாக கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரியை வழிமறித்து கரும்பு துண்டுகளை கத்தையோடு தூக்கிச் சென்றதால் வாகன ஓட்டிகள் அச்சம். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. இவை அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையோரம் உலா வருவதும் சாலையை கடப்பதும் வாடிக்கையாகி வருகின்றன. இந்நிலையில் சத்தியமங்கலம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானைகள் திம்பம் மலைப்பாதை வழியாக சென்று கொண்டிருந்த கார் ஒன்றை துரத்தியது. பின்னர் அவ்வழியாக கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரியை வழிமறித்த யானைகள் லாரியில் இருந்த கரும்பு துண்டுகளை கத்தை கத்தையாக எடுத்துச் சென்றது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அச்சத்துக்குள்ளாகினர். இதன் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது
செய்திகள்
தாளவாடியா அருகே கரும்பு லாரியை வழிமறித்து கரும்பு கட்டை தூக்கிச் சென்ற யானை
🕒 23 அக்., 2026, 10:52 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

