Settings

முகப்பு/செய்திகள்/திருச்சி சூரியூர் அரைவட்ட சாலையில் லாரிகள் நேருக்கு நேர் மோதல்: ஓட்டுநர் பலி; ஒருவர் படுகாயம்
செய்திகள்

திருச்சி சூரியூர் அரைவட்ட சாலையில் லாரிகள் நேருக்கு நேர் மோதல்: ஓட்டுநர் பலி; ஒருவர் படுகாயம்

🕒 10 அக்., 2026, 07:09 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
திருச்சி சூரியூர் அரைவட்ட சாலையில் லாரிகள் நேருக்கு நேர் மோதல்: ஓட்டுநர் பலி; ஒருவர் படுகாயம்
✨

AI Highlights

  • •திருச்சி துவாக்குடி அருகே இரண்டு சரக்கு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் லாரி ஓட்டுநர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயம்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்த செந்தில்குமார் (45), தேங்காய் மட்டைகளை ஏற்றுவதற்காகப் பொள்ளாச்சியில் இருந்து தஞ்சாவூர் நோக்கி லாரியை ஓட்டிச் சென்றுகொண்டிருந்தார்.

அதேபோல், காரைக்காலில் இருந்து கோவை மாவட்டம் நசியனூர் நோக்கிப் பார்சல் சர்வீஸ் வாகனத்தை குமரேசன் (35) ஓட்டிச் சென்றார். இந்நிலையில், இன்று காலை திருச்சி துவாக்குடி அரைவட்ட சாலையில் எலந்தப்பட்டி அருகே வந்தபோது, இரண்டு சரக்கு வாகனங்களும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் இரு வாகனங்களின் ஓட்டுநர்களும் வாகனங்களுக்குள் சிக்கிக்கொண்டனர்.

தீயணைப்புத் துறையினர் மீட்பு

விபத்து குறித்து ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், நவல்பட்டு தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், வாகனங்களுக்குள் சிக்கியிருந்த செந்தில்குமார் மற்றும் குமரேசன் ஆகிய இருவரையும் மீட்டனர்.

பின்னர், செந்தில்குமார் துவாக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

பலத்த காயமடைந்த குமரேசன், சிகிச்சைக்காகத் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

போலீசார் விசாரணை

இந்த விபத்து குறித்து நவல்பட்டு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த இரண்டு சரக்கு வாகனங்களையும் கிரேன் உதவியுடன் அப்புறப்படுத்தினர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔