Settings

முகப்பு/செய்திகள்/செயற்கை நுண்ணறிவு குறித்து பயிற்சி வகுப்பினைமாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ந.மிருணாளினி
செய்திகள்

செயற்கை நுண்ணறிவு குறித்து பயிற்சி வகுப்பினைமாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ந.மிருணாளினி

🕒 16 அக்., 2026, 11:54 AM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு
செயற்கை நுண்ணறிவு குறித்து பயிற்சி வகுப்பினைமாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ந.மிருணாளினி
✨

AI Highlights

  • •அரியலூர் மாவட்டத்தில் செயற்கை நுண்ணறிவு குறித்து பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ந.மிருணாளினி

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

அரியலூர் மாவட்டத்தில் செயற்கை நுண்ணறிவு குறித்து பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ந.மிருணாளினி, இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். அரியலூர் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், பள்ளிக்ககல்வித் துறையின் சார்பில் செயற்கை நுண்ணறிவு மாற்றுருவாக்க கல்வி அனுபவத்தை வழங்கும் பள்ளி ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ந.மிருணாளினி, இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: தமிழக அரசின் உத்தரவின்படி, மாணவர்களின் கற்றல் திறன் மற்றும் ஆசிரியர்களின் கற்பித்தல் திறன்களை மேம்படுத்தும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகள் அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றையதினம் ஆசிரியர்களின் தொழில்முறைத் திறன்களை மேம்படுத்துதல் மற்றும் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளை மாற்றுருவாக்கம் செய்யும் வகையில் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு செயற்கை நுண்ணறிவு குறித்த பயிற்சி வகுப்பு தொடங்கி வைக்கப்பட்டது. இப்பயிற்சியில் 120-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். அந்த வகையில், செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் பாடத்திட்டத்திற்கு ஏற்ற கற்றல் முறைகளை உருவாக்குதல், பாடங்களை மாணவர்களுக்கு எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குதல், கற்றல் செயல்பாடுகளைப் புதுமையான முறையில் வடிவமைத்தல் மற்றும் மாணவர்களின் புரிதல் திறனை மேம்படுத்துதல், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பாடங்களுக்கான கற்பித்தல் திட்டங்களைத் தயாரித்தல், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் துணையுடன் மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் கற்றல் சூழலை உருவாக்கும் வழிமுறைகள், கல்விசார் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் விரிவாக பயிற்சி அளிக்கப்பட்டது. எனவே, இப்பயிற்சியின் மூலம் ஆசிரியர்கள் தங்களது கற்பித்தல் திறன்களை மேலும் மேம்படுத்தி, வகுப்பறைகளில் தொழில்நுட்பத்தைச் சிறப்பாகப் பயன்படுத்துவதுடன், மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்திட வேண்டும். மாணவர்களுக்கு எதிர்காலத் தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கு ஏற்ற கல்வி அனுபவத்தை வழங்கிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும் 16.10.2026 அன்று தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 75-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு இப்பயிற்சி வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ந.மிருணாளினி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார். இந்நிகழ்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு.ரேணுகோபால், கிரிசாலிஸ் இயக்குநர் திரு.கணேஷ் சுப்ரமணியன், தொடர்புடைய துறை சார்ந்த அலுவலர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். செய்தி வெளியீடு - செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், அரியலூர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔