விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவில், பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, பூங்காவில் உள்ள அடிப்படை வசதிகள் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்புப் பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். மேலும், பொதுமக்களின் பயன்பாட்டை உறுதி செய்யும் வகையில் பூங்காவைத் தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது விழுப்புரம் நகராட்சி ஆணையர் நாராயணன், நகராட்சி பொறியாளர் புவனேஸ்வரி, நகர் நல அலுவலர் மருத்துவர் ஸ்ரீப்ரியா உள்ளிட்ட பல முக்கிய அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.









