நெல்லை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாதந்தோறும் மாவட்ட நிர்வாகம் சார்பில் மூன்றாவது வெள்ளிக்கிழமை நடத்தப்படுவது வழக்கம். இதன் தொடர்ச்சியாக இன்று வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு மாவட்ட விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது கூட்டம் 11 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் விவசாயிகள் காலை 10 மணி முதலே கூட்டரங்கிற்கு வர தொடங்கினர் , விவசாயிகள் வந்த நிலையில் 11 மணிக்கு தொடங்க வேண்டிய கூட்டம் 12 மணி ஆகியும் தொடங்கப்படவில்லை மேலும் கூட்டத்திற்கு ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் வராததால் அதிருப்தி அடைந்த விவசாயிகள், தாங்கள் அவமதிக்கப்படுவதாக கூறி கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். மேலும் கூட்ட அரங்கில் இருந்து வெளியேறிய விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்துக்கு எதிராகவும் தமிழக அரசுக்கு எதிராகவும், பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய கோரியும் முழக்கங்கள் எழுப்பியவாறு வெளியே வந்தனர். மேலும் ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகள் போராட்டம் குறித்து தகவல் அறிந்ததும் கோட்டாட்சியர், விவசாயத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் ஆனால் விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் வரவேண்டும் வந்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என தெரிவித்தனர். இதனை அடுத்து மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானம் செய்தார். உடனடியாக கூட்டம் தொடங்கப்படும் என்று கூறி விவசாயிகளை கூட்டத்திற்கு வருமாறு அழைப்பு கொடுத்தார் ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து விவசாயிகள் தங்களது போராட்டத்தை கைவிட்டு உடனடியாக கூட்டத்தில் பங்கேற்க சென்றனர் ஆட்சியர் அலுவலகம் முன்பு அரைமணிநேரத்திற்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடைபெற்றதால் ஆட்சியர் அலுவலக வளாகம் பெரும் பரபரப்புடன் காணப்பட்டது.
செய்திகள்
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தை புறக்கணித்து தர்ணா – ஆட்சியர் அலுவலகம் முன்பு பரபரப்பு
🕒 21 ஆக., 2026, 07:09 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
