விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சியில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறியப்பட்ட புதிய கட்டடத்தின் உரிமையாளருக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட 43ஆவது வார்டு அம்மன்கோவில்பட்டி நடுத் தெருவில் புதிய கட்டடக் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், அப்பகுதியில் மாநகராட்சியின் டெங்கு தடுப்பு சுகாதாரத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது, அங்கே கட்டடப் பணிகளுக்காகக் கீழ்நிலைத் தொட்டியில் தேக்கி வைக்கப்பட்டிருந்த தண்ணீரில் டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ஏ.டி.எஸ் வகை கொசுப்புழுக்கள் உற்பத்தியாகி இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, பொது சுகாதாரச் சட்டம் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு விதிகளின்படி, கட்டட உரிமையாளருக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டதோடு, எச்சரிக்கை நோட்டீசும் வழங்கப்பட்டது.
செய்திகள்
டெங்கு கொசுப்புழுக்கள்: கட்டட உரிமையாளருக்கு ரூ.10,000 அபராதம்!
🕒 8 அக்., 2026, 05:47 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

✨
AI Highlights
- •சிவகாசி மாநகராட்சியில் புதிய கட்டடத்தின் கீழ்நிலைத் தொட்டியில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறியப்பட்டதை அடுத்து, உரிமையாளருக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
