திண்டுக்கல் அஞ்சலி பைபாஸ் - திருச்சி பைபாஸ் சாலையில், அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் எதிரே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மீது சென்ற சரக்கு வேன் மோதியதில் பசுமாடு ஒன்று சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
விபத்துக்குள்ளான தாய் பசுவின் அருகில் நின்ற கன்றுக்குட்டி, அதன் உடலை நாக்கால் நக்கி கதறியது அவ்வழியாகச் சென்ற பொதுமக்களிடையே பெரும் சோகத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த தாடிக்கொம்பு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

