Settings

முகப்பு/செய்திகள்/நீதிமன்ற ஊழியர் தற்கொலை முயற்சி: நீதிபதி மீது நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம்
செய்திகள்

நீதிமன்ற ஊழியர் தற்கொலை முயற்சி: நீதிபதி மீது நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம்

🕒 8 அக்., 2026, 04:41 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
நீதிமன்ற ஊழியர் தற்கொலை முயற்சி: நீதிபதி மீது நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம்
✨

AI Highlights

  • •விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நீதிபதியின் வீட்டு வேலைக்கு அழுத்தம் தந்ததால் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற நீதிமன்ற ஊழியருக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நீதிமன்றத்தில் பணிபுரியும் அலுவலக உதவியாளர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தைக் கண்டித்து, நீதிமன்ற மற்றும் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சாத்தூர் இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராகப் பணிபுரிந்து வருபவர் சிவகாசி ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த சரவண வேல்குமார் என்பவரது மனைவி செல்வி ஈஸ்வரி (27). இவர், அதே நீதிமன்றத்தின் நீதிபதி வரதராஜன் தன் வீட்டுப் பணிகளுக்குத் தன்னைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்ததாகவும், சம்பளம் வழங்குவதில் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தியதாகவும் குற்றம்சாட்டினார். இதன் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான செல்வி ஈஸ்வரி, நேற்று காலை நீதிமன்ற வளாகத்தில் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

உடனடியாக மீட்கப்பட்ட அவர், சிகிச்சைக்காகத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தைக் கண்டித்து, நீதிமன்ற ஊழியர்கள் சங்கம் மற்றும் அரசு ஊழியர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நீதிமன்ற ஊழியர்கள் சங்க விருதுநகர் மாவட்டச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், அலுவலக ஊழியர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய நீதிபதி வரதராஜன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தற்கொலைக்கு முயன்ற ஊழியர் செல்வி ஈஸ்வரிக்கு நீதி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔