Settings

முகப்பு/செய்திகள்/நகராட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் நிர்வாகி தர்ணா: குடிநீர் வழங்க கோரி போராட்டம்
செய்திகள்

நகராட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் நிர்வாகி தர்ணா: குடிநீர் வழங்க கோரி போராட்டம்

🕒 26 அக்., 2026, 07:18 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
நகராட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் நிர்வாகி தர்ணா: குடிநீர் வழங்க கோரி போராட்டம்
✨

AI Highlights

  • •வாணியம்பாடி நகராட்சியில் 3 மாதங்களாகக் குடிநீர் வழங்கப்படாததைக் கண்டித்து, காங்கிரஸ் பெண் நிர்வாகி நுழைவாயிலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சி அலுவலக நுழைவாயிலில், முறையாகக் குடிநீர் வழங்கப்படவில்லை எனக் கண்டித்து காங்கிரஸ் பெண் நிர்வாகி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

வாணியம்பாடி நகராட்சியின் 34-வது வார்டுக்கு உட்பட்ட நேதாஜி நகர் பிஸ்மில்லா மசூதி அருகில் வசிப்பவர் விஜயலட்சுமி. இவர் அப்பகுதியில் உள்ள 9 தெருக்களில் கடந்த 3 மாதங்களாக முறையாகக் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக நகராட்சி அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர், நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து அலுவலக நுழைவாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதுடன், பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினார்.

இதையடுத்து, நகராட்சி உதவிப் பொறியாளர் கோவிந்தப் தலைமையிலான அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட விஜயலட்சுமியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, குடிநீர் விநியோகம் சீராக வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். அதனைத் தொடர்ந்து, அவர் தனது போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றார். குடிநீர் பிரச்சினையை வலியுறுத்தி நகராட்சி அலுவலகத்தில் பெண் நிர்வாகி தர்ணாவில் ஈடுபட்ட நிகழ்வால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் பரபரப்பு நிலவியது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔