சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/ஆட்சியர் பேசும்போதே தூக்கம், செல்போனில் அதிகாரிகள்: விருதுநகர் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அதிருப்தி
செய்திகள்

ஆட்சியர் பேசும்போதே தூக்கம், செல்போனில் அதிகாரிகள்: விருதுநகர் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அதிருப்தி

🕒 21 ஆக., 2026, 10:41 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
ஆட்சியர் பேசும்போதே தூக்கம், செல்போனில் அதிகாரிகள்: விருதுநகர் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அதிருப்தி

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தலைமையில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டிய இந்தக் கூட்டத்தில், சில அதிகாரிகளின் அலட்சியமான செயல்பாடு விவசாயிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

கூட்டத்தில் பங்கேற்க வேண்டிய அதிகாரிகளில் சுமார் 20 சதவீதம் பேர் வரவில்லை என்றும், கலந்துகொண்ட சில அதிகாரிகளும் விவசாயிகளின் குறைகளை கவனமாக கேட்கவில்லை என்றும் விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

ஆட்சியர் பேசும்போதே செல்போன், தூக்கம்

கூட்டத்தின் போது மாவட்ட ஆட்சியர் நேரடியாக விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து பேசி கொண்டிருந்தபோதும், சில அதிகாரிகள் செல்போனில் சமூக வலைதளங்கள் மற்றும் ரீல்ஸ் பார்ப்பதிலும், தொடர்ந்து மொபைல் பயன்படுத்துவதிலும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

மேலும், சிலர் கூட்ட அரங்கிலேயே மேஜை மீது தலை சாய்த்து தூங்கியதாகவும், தரையை நோக்கி குனிந்து செல்போனில் மூழ்கியிருந்ததாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

எங்கள் குறைகள் எப்படி தீரும்?

விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினைகளை தீர்க்க வேண்டிய அதிகாரிகளே பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்டால், தங்களது மனுக்களுக்கு எவ்வாறு தீர்வு கிடைக்கும் என கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

கூட்டம் முடிந்த பின்னரும், அதிகாரிகளின் அலட்சியப் போக்கு குறித்து விவசாயிகள் மத்தியில் பரவலான எதிர்ப்பு மற்றும் ஏமாற்றம் நிலவியது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔