விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில், ஆட்டோ தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் முத்துக்குமரன் மற்றும் மாவட்ட துணை செயலாளர் முருகன் ஆகியோர் கண்டன உரையாற்றி, தொழிலாளர்களின் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

