சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கான மனுக்கள் பெறும் தேதி மாற்றம்.
செய்திகள்

கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கான மனுக்கள் பெறும் தேதி மாற்றம்.

The News Outlook
🕒 12 ஆக., 2026, 12:21 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கான மனுக்கள் பெறும் தேதி மாற்றம்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

கூட்டுறவுத் துறையில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் சங்கப் பணியாளர்களின் கோரிக்கை மனுக்களைப் பெறும் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக விருதுநகர் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் வீ. திருப்பதி தெரிவித்துள்ளார்.

கூட்டுறவுத் துறை மற்றும் கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் ஊழியர்களின் துறை சார்ந்த கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்க அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது. இதன்படி, வட்டார அளவில் கூட்டுறவுச் சார்பதிவாளர் மற்றும் கள அலுவலர்கள் மூலமாக, ஆகஸ்ட் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையான கடந்த 07.08.2026 அன்று கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, தகுதியின் அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், வட்டார அளவில் தீர்வு காண இயலாத மனுக்கள் மற்றும் துணைப்பதிவாளர்களிடம் நேரடியாக வழங்கப்பட வேண்டிய கோரிக்கை மனுக்கள், அருப்புக்கோட்டை மற்றும் திருவில்லிபுத்தூர் சரக துணைப்பதிவாளர்களால் ஆகஸ்ட் 2-வது வெள்ளிக்கிழமையான 14.08.2026 அன்று பெறப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், திருவில்லிபுத்தூர் அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) திருக்கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு ஆகஸ்ட் 14-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, அன்றைய தினம் பெறப்படவிருந்த கோரிக்கை மனுக்கள், வரும் 17.08.2026 (திங்கள்கிழமை) அன்று அருப்புக்கோட்டை மற்றும் திருவில்லிபுத்தூர் சரக துணைப்பதிவாளர் அலுவலகங்களில் பெறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவுத் துறையின் அனைத்துப் பிரிவு ஊழியர்களும் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தித் தங்கள் கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என்றும் மண்டல இணைப்பதிவாளர் குறிப்பிட்டுள்ளார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔