விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பட்டப்பகலில் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் விலை உயர்ந்த செல்போனை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த திருட்டு சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
சிவகாசி பி.கே.எஸ். தெருவைச் சேர்ந்த வரதன், சிவகாசி பெருமாள் கோவிலில் அர்ச்சகராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அவரது வீடு திறந்து கிடந்ததாக கூறப்படுகிறது.
வீட்டுக்குள் புகுந்து செல்போன் திருட்டு
இதனை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் நுழைந்து அங்கு வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த செல்போனை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.
திருட்டு நடந்தபோது மர்ம நபரின் நடமாட்டம் பி.கே.எஸ். தெருவில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது.
போலீசார் விசாரணை
சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வரும் சிவகாசி நகர் காவல் நிலைய போலீசார், பட்டப்பகலில் வீட்டுக்குள் புகுந்து செல்போனை திருடிச் சென்ற மர்ம நபரை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், அந்த நபரை பிடிக்க போலீசார் தேடுதல் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளனர். பட்டப்பகலில் நடைபெற்ற இந்த திருட்டு சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

