Settings

முகப்பு/செய்திகள்/பெல்ஸ்டார் நிதி நிறுவனத்தில் போலி ஆவணங்கள் மூலம் கடனா? திருவெறும்பூர் கிளை ஊழியர்கள் மீது குற்றச்சாட்டு
செய்திகள்

பெல்ஸ்டார் நிதி நிறுவனத்தில் போலி ஆவணங்கள் மூலம் கடனா? திருவெறும்பூர் கிளை ஊழியர்கள் மீது குற்றச்சாட்டு

🕒 8 அக்., 2026, 06:17 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
பெல்ஸ்டார் நிதி நிறுவனத்தில் போலி ஆவணங்கள் மூலம் கடனா? திருவெறும்பூர் கிளை ஊழியர்கள் மீது குற்றச்சாட்டு
✨

AI Highlights

  • •பெல்ஸ்டார் நிதி நிறுவனத்தில் போலி ஆவணங்கள் மூலம் கடனா? திருவெறும்பூர் கிளை ஊழியர்கள் மீது குற்றச்சாட்டு

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருச்சி திருவெறும்பூரில் இயங்கி வரும் பெல்ஸ்டார் நிதி நிறுவனத்தின் கிளையில், கடன் வழங்கும் நடைமுறையில் முறைகேடுகள் நடைபெறுவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.


பணம் தேவைப்படும் நபர்களை அணுகும் சில ஊழியர்கள், அவர்களுக்கு கடன் பெற்றுத் தருவதற்காக புதிய நபர்களை கணவன்–மனைவி எனக் குறிப்பிட்டு ஆவணங்கள் தயாரிக்கும் முறையை தெரிவிப்பதாகவும், அந்த ஆவணங்களை தயாரிப்பது முதல் கடன் விண்ணப்பம் மற்றும் கடன் பெறும் நடைமுறை வரை ஊழியர்களே உதவி செய்வதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.


குறிப்பாக, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு இடையே உண்மையான கணவன்–மனைவி உறவு இல்லாத நிலையிலும், அந்த வகையில் ஆவணங்கள் தயாரித்து கடன் பெறுவதற்கு ஏற்பாடு செய்து தரப்படுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். இந்த முழு நடவடிக்கைக்கும் சில ஊழியர்களே வழிகாட்டி, தேவையான உதவிகளை செய்து கடன் பெற்றுத் தருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதற்காக ஊழியர்கள் கமிஷன் உள்ளிட்ட பணப் பலன்களை பெற்றதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். கடன் வழங்கப்பட்ட பின்னர், சிலர் தவணைகளை முறையாக செலுத்த முடியாத சூழ்நிலைக்கு வரும்போது, அதே ஆவணங்கள் மற்றும் தனிப்பட்ட தகவல்களை பயன்படுத்தி அவர்களுக்கு அழுத்தம் கொடுப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.


தவணை செலுத்த முடியாத நிலையில், தொலைபேசி மூலம் தொடர்ந்து அழுத்தம் கொடுப்பதுடன், பணம் செலுத்தாவிட்டால் அவமானப்படுத்துவோம் அல்லது பிரச்சினையை ஏற்படுத்துவோம் என மிரட்டும் வகையில் பேசுவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.


மேலும், சில ஊழியர்கள் கடன் பெற்றவர்களின் வீடுகளுக்குச் சென்று குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் முன்னிலையில் அவமானப்படுத்தும் வகையில் பேசுவதாகவும், தகாத வார்த்தைகளை பயன்படுத்துவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். இதனால் தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் மன உளைச்சலும் அவமானமும் ஏற்படுவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.


இதனால், கடன் வழங்கும் முன் ஆவணங்கள் எவ்வாறு சரிபார்க்கப்பட்டன, கணவன்–மனைவி எனக் குறிப்பிடப்பட்டவர்கள் உண்மையில் அந்த உறவில் உள்ளவர்களா, ஆவணங்களை தயாரிப்பதில் ஊழியர்களின் பங்கு என்ன, கடன் ஏற்பாடு செய்ததற்காக கமிஷன் பெறப்பட்டதா, மேலும் கடன் வசூலிக்கும் நடவடிக்கைகளில் விதிமுறைகள் பின்பற்றப்பட்டனவா என்பது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔