Settings

முகப்பு/தமிழ்நாடு/தண்ணீர் கேட்டு ஏடிஎம் உரிமையாளரை ஏமாற்றி ரூ.86,000-க்கு மேல் கொள்ளையடித்த மர்ம நபர்கள்!
தமிழ்நாடு

தண்ணீர் கேட்டு ஏடிஎம் உரிமையாளரை ஏமாற்றி ரூ.86,000-க்கு மேல் கொள்ளையடித்த மர்ம நபர்கள்!

🕒 18 நவ., 2026, 10:33 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
தண்ணீர் கேட்டு ஏடிஎம் உரிமையாளரை ஏமாற்றி ரூ.86,000-க்கு மேல் கொள்ளையடித்த மர்ம நபர்கள்! - படம் 1 - The News Outlook
📸1 / 8
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (8)படத்தைத் தொடவும்
✨

AI Highlights

  • •மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே ஏடிஎம் மையத்தில் பணம் நிரப்பிய டீலரின் கவனத்தை திசைதிருப்பி ரூ.86,100 ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் அருகே பட்டப்பகலில் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்பிக் கொண்டிருந்த டீலரின் கவனத்தை திசைதிருப்பி, ரூ.86,100 ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்ற இரண்டு மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தரங்கம்பாடி தாலுகா, செம்பனார்கோவில் அருகே உள்ள பரசலூர் ஊராட்சி மஹாராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவர் அப்பகுதியில் தனியார் ஏடிஎம் மையத்தின் உரிமையைப் பெற்று, அதன் ஒரு பகுதியை கண்ணாடி டோரால் தடுத்து பெட்டிக்கடையும் நடத்தி வருகிறார். வழக்கம் போல் இன்று மதியம் சுமார் 12:30 மணியளவில், செம்பனார்கோவிலில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியிலிருந்து ஏடிஎம் இயந்திரத்தில் நிரப்புவதற்காக அவர் பணத்தை எடுத்து வந்துள்ளார்.

ஏடிஎம் மையத்திற்குள் பணத்தை நிரப்பும் பணியில் முருகன் ஈடுபட்டிருந்தபோது, அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் குடிப்பதற்குத் தண்ணீர் பாட்டில் கேட்டு அவரது கவனத்தை திசைதிருப்பியுள்ளார். இதனை நம்பி முருகன் தண்ணீர் பாட்டில் எடுப்பதற்காகத் திரும்பியபோது, அந்த மர்ம நபர் அங்கிருந்த ரூ.86,100 பணம் அடங்கிய பையைத் திருடிக்கொண்டு வெளியே ஓடியுள்ளார்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த முருகன் சத்தமிட்டபடியே அந்த நபரைப் பிடிக்கப் பின்னால் ஓடியுள்ளார். எனினும், வெளியே 'யுனிகார்ன்' இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்தவாறு தயாராகக் காத்திருந்த மற்றொரு கூட்டாளியுடன், தொப்பி அணிந்திருந்த அந்த மர்ம நபர் தப்பியோடியுள்ளார்.

பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்துத் தகவல் அறிந்த செம்பனார்கோவில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைக் கைப்பற்றி தப்பியோடிய மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
அரசுப் பேருந்தில் அதிரடி சோதனை: 1,600 போதை மாத்திரைகளுடன் சிக்கிய நபர்கள்!தமிழ்நாடு

அரசுப் பேருந்தில் அதிரடி சோதனை: 1,600 போதை மாத்திரைகளுடன் சிக்கிய நபர்கள்!

Srinivasan🕒 நவ. 23
ரேஷன் கடைகளில் தற்காலிக நியமனம் எதிர்த்து தமிழகம் முழுவதும் பரபரப்பு போராட்டம்!தமிழ்நாடு

ரேஷன் கடைகளில் தற்காலிக நியமனம் எதிர்த்து தமிழகம் முழுவதும் பரபரப்பு போராட்டம்!

NESARAJAN🕒 நவ. 23
கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகரில் நியாய விலைக் கடை ஊழியர்கள் அதிரடி போராட்டம்!தமிழ்நாடு

கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகரில் நியாய விலைக் கடை ஊழியர்கள் அதிரடி போராட்டம்!

Ramkumarsamy🕒 நவ. 23
நடமாடும் இ-சேவை வாகனம் தொடக்கம்: மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்தமிழ்நாடு

நடமாடும் இ-சேவை வாகனம் தொடக்கம்: மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

NESARAJAN🕒 நவ. 23
பாதுகாப்புக்கு உயர் தொழில்நுட்பம்: நாகப்பட்டினத்தில் பறக்கும் ட்ரோன் கேமராக்கள்!தமிழ்நாடு

பாதுகாப்புக்கு உயர் தொழில்நுட்பம்: நாகப்பட்டினத்தில் பறக்கும் ட்ரோன் கேமராக்கள்!

Sugumaran🕒 நவ. 23
பதவி நீக்கம் கோரி நாமக்கல்லில் கொந்தளித்த ஆதித்தமிழர் பேரவை!செய்திகள்

பதவி நீக்கம் கோரி நாமக்கல்லில் கொந்தளித்த ஆதித்தமிழர் பேரவை!

SRIDHAR🕒 நவ. 26
ஆட்சியாளர்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய லட்சிய ஜனநாயக கட்சி! அதிர வைக்கும் குற்றச்சாட்டுகள்அரசியல்

ஆட்சியாளர்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய லட்சிய ஜனநாயக கட்சி! அதிர வைக்கும் குற்றச்சாட்டுகள்

SASHVI🕒 நவ. 26
குழந்தைகளின் எதிர்காலமே நாட்டின் எதிர்காலம்! நாமக்கல்லில் மாணவர்களின் விழிப்புணர்வு பேரணிசெய்திகள்

குழந்தைகளின் எதிர்காலமே நாட்டின் எதிர்காலம்! நாமக்கல்லில் மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி

SRIDHAR🕒 நவ. 26
TNO வாட்ஸ்அப் சானல் ➔