Settings

முகப்பு/செய்திகள்/நிம்மதி பெருமூச்சு விட்ட ஆசனூர் மக்கள்: கூண்டில் சிக்கிய 3 சிறுத்தைகள்!
செய்திகள்

நிம்மதி பெருமூச்சு விட்ட ஆசனூர் மக்கள்: கூண்டில் சிக்கிய 3 சிறுத்தைகள்!

🕒 23 அக்., 2026, 03:35 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
✨

AI Highlights

  • •ஈரோடு மாவட்டம் ஆசனூர் வனப்பகுதியில் கால்நடைகளையும், தொழிலாளியையும் தாக்கி வந்த 3 சிறுத்தைகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட ஆசனூர் வனப்பகுதியில், பொதுமக்களையும் கால்நடைகளையும் அச்சுறுத்தி வந்த மூன்று சிறுத்தைகள் வனத்துறையினரால் கூண்டு வைத்து பிடிக்கப்பட்டுள்ளன.

ஆசனூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பங்களா தொட்டி, பழைய ஆசனூர், ஒங்கல்வாடி, அரேப்பாளையம் மற்றும் சென்டர் தொட்டி உள்ளிட்ட மலைக்கிராமங்களில் கடந்த சில நாட்களாக சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்திருந்தது. இவை அப்பகுதியில் பத்து க்கும் மேற்பட்ட பசுமாடுகள் மற்றும் கன்றுகளை வேட்டையாடியதோடு, கடந்த சில நாட்களுக்கு முன்பு பங்களா தொட்டி கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி என்ற கூலித் தொழிலாளியைத் தாக்கி கொன்றது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் இருந்தனர்.

மக்களின் கோரிக்கையை ஏற்று, வனத்துறையினர் அப்பகுதியில் தானியங்கி கேமராக்களைப் பொருத்தி, சிறுத்தைகள் நடமாடும் நான்கு இடங்களில் கூண்டுகளை அமைத்தனர். இந்நிலையில், நேற்று அதிகாலை ஆசனூர் வனத்துறை அலுவலகத்திற்கு எதிரே உள்ள பள்ளத்தில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் ஒரு சிறுத்தையும், அரேப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் விவசாயத் தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் இரண்டு சிறுத்தைகளும் என ஒரே நாளில் மொத்தம் மூன்று சிறுத்தைகள் சிக்கின.

பிடிக்கப்பட்ட சிறுத்தைகளில் இரண்டு குட்டிகள் கேர்மாளம் அடர்ந்த வனப்பகுதியிலும், மற்றொரு சிறுத்தை தாளவாடி அடர்ந்த வனப்பகுதியிலும் வனத்துறையினரால் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டன. இந்த நடவடிக்கையால் அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔