கரூர் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜான் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட லட்சுமிபுரத்தில் அமைந்துள்ள மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்திற்கு இன்று மாலை 4.30 மணியளவில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வருகை தந்தனர். தொடர்ந்து, அங்குள்ள ஆவணங்களை ஆய்வு செய்து வரும் நிலையில், இந்தச் சோதனை ஒரு மணி நேரத்திற்கும் மேலாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

