தமிழ்நாடு வேளாண்மைப் பொறியியல் துறை மூலம், நடப்பு நிதியாண்டில் இணையதள குலுக்கல் முறையில் ரூ.765.47 லட்சம் மதிப்பீட்டில் 529 உழுவை இயந்திரங்கள், பவர்டில்லர், ரொட்டவேட்டர் மற்றும் வைக்கோல் கட்டும் இயந்திரங்கள் மானிய விலையில் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் முதற்கட்டமாக, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ.59.89 லட்சம் மதிப்பீட்டிலான டிராக்டர், பவர்டில்லர் மற்றும் நெல் நாற்று நடவு இயந்திரங்களை விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் மற்றும் நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் ஆகியோர் இணைந்து வழங்கினர்.

