சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/கல்விக்கு வயது தடையில்லை - மகளுடன் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று தாய் சாதனை!
செய்திகள்

கல்விக்கு வயது தடையில்லை - மகளுடன் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று தாய் சாதனை!

The News Outlook
🕒 11 ஆக., 2026, 11:59 PM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு
கல்விக்கு வயது தடையில்லை - மகளுடன் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று தாய் சாதனை!

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் கரீம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிபகத்துல்லா. கூலித் தொழிலாளியான இவருக்கு மெஹர் பானு என்ற மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனர். சிறுவயதில் குடும்பச் சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக மெஹர் பானுவால் தனது படிப்பைத் தொடர முடியாமல் போனது. ​திருமணத்திற்குப் பிறகு, கணவரின் சொற்ப வருமானத்தில் குடும்பச் செலவுகள் மற்றும் பிள்ளைகளின் படிப்பைக் கவனிப்பது சவாலாக இருந்தது. இதனால் தானும் வேலைக்குச் சென்று குடும்பத்திற்கு உதவ வேண்டும் என்று மெஹர் பானு விரும்பினார். இருப்பினும், குறைந்தபட்சக் கல்வித் தகுதியான 10-ஆம் வகுப்பு கூட முடிக்காதது அவருக்குப் பெரிய தடையாக இருந்தது. ​தாயும் மகளும் ‘படிப்புத் தோழிகள்’ ​அந்நேரத்தில், அவரது மூத்த மகள் முஸ்தகீமா 10-ஆம் வகுப்பு படித்து வந்தார். மகளின் படிப்பைப் பார்த்த மெஹர் பானுவுக்குத் தானும் மீண்டும் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் எழுந்தது. உடனே, மகளுடன் சேர்ந்து 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தனித்தேர்வராக (Private candidate) எழுத முடிவு செய்தார். ​இதற்காக அருகில் உள்ள பயிற்சி மையத்தில் சேர்ந்து சுமார் 6 மாதங்களுக்கும் மேலாகத் தீவிரமாகப் படித்தார். வீட்டில் தாயும் மகளும் ஒருவருக்கொருவர் பாடம் சொல்லித் தரும் நல்ல தோழிகளாக மாறினர். சமீபத்தில் வெளியான 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், தாய்-மகள் இருவரும் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர். ​“அரசு வேலையே எனது அடுத்த இலக்கு!” ​இதுகுறித்து மெஹர் பானு கூறும்போது: “சிறுவயதில் படிப்பை பாதியில் நிறுத்தியது எனக்கு ஆறாத ஏமாற்றமாக இருந்தது. கணவரின் வருமானத்தை மட்டும் நம்பியிருக்க முடியாது என்பதால் வேலைக்குச் செல்ல முடிவெடுத்தேன். மகளுக்குப் படிப்பில் துணையாக நண்பர்கள் யாரும் இல்லாததால் நானே தோழியாக மாறினேன்; அவரும் எனக்குப் படிப்புத் தோழியானார். தற்போது தேர்ச்சி பெற்றது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. உயர்கல்வி பயின்று அரசு வேலையில் சேருவதே எனது அடுத்த இலக்கு” என்றார். ​மகள் பெருமிதம் ​தாயுடன் இணைந்து படித்து வெற்றிபெற்ற மகள் முஸ்தகீமா கூறும்போது: ​“அம்மாவுடன் இணைந்து படித்தது எனக்குப் பெரிய பலமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. தற்போது நான் 11-ஆம் வகுப்பு சேர்ந்துள்ளேன். எனது அம்மாவைப் போல நானும் எதிர்காலத்தில் அரசு வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற இலக்கோடு படித்து வருகிறேன்” என்றார். ​பாதியில் நின்ற படிப்பை பல ஆண்டுகளுக்குப் பிறகு விடாமுயற்சியால் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ள மெஹர் பானுவின் இந்த சாதனை அப்பகுதி மக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் உறவினர்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔