விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் உள்ள அருள்மிகு துணைமாலை அம்மன் சமேத ஸ்ரீ திருமேனிநாதர் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குண்டாற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுத்து வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் அமாவாசை நாளில் வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்சுழி குண்டாற்றில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து சாமி தரிசனம் செய்து வழிபடுவது வழக்கம். மேலும் முன்னோருக்கு தர்ப்பணம் செய்ய திருச்சுழியில் திருமேனிநாதராய் எழுந்தருளியுள்ள சிவபெருமான் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. பகவான் ரமணமகரிஷி பிறந்த இடம் என்பதால் திருச்சுழி சுற்றுலா ஸ்தலமாகவும் உள்ளது. திருச்சுழி ஸ்தலமானது காசி, ராமேஸ்வரம் புண்ணிய ஸ்தலங்களுக்கு அடுத்தபடியாக ஒரு புண்ணிய ஸ்தலமாக உள்ளது. 14 பாண்டிய ஸ்தலங்களில் 10 வது ஸ்தலமாகவும் திருச்சுழி உள்ளது. மேலும், ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை நாட்களில் திருச்சுழி குண்டாற்றில் அதிகப்படியான பக்தர்கள் திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் ஆடி அமாவாசையான இன்று காலை 5 மணி முதலே வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குண்டாற்றில் தங்களது முன்னோர்களுக்குத் தர்ப்பணம், திதி கொடுத்து வருகின்றனர். மேலும், திருமேனிநாதர் கோவிலில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கோவிலில் மோட்சதீபம் ஏற்றி வைத்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் ஆடி அமாவாசையை முன்னிட்டு திருச்சுழி காவல் நிலைய போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
செய்திகள்
திருச்சுழி குண்டாற்றில் ஆடி அமாவாசை வழிபாடு! முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் செய்து பக்தர்கள் வழிபாடு
The News Outlook
🕒 12 ஆக., 2026, 02:42 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
