சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து. ஒரு அறை சேதம் ஒருவர் படுகாயம்
செய்திகள்

பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து. ஒரு அறை சேதம் ஒருவர் படுகாயம்

🕒 24 ஆக., 2026, 06:56 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து. ஒரு அறை சேதம் ஒருவர் படுகாயம்

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள தாயில்பட்டி பகுதியில் உள்ள நாகா பட்டாசு தொழிற்சாலை திடீர் வெடி விபத்து ஏற்பட்டது.தாயில்பட்டி பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவருக்கு சொந்தமான நாகா பட்டாசு தொழிற்சாலை மாவட்ட வருவாய் துறை உரிமம் பெற்று சிறிய ரக பட்டாசு வெடிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது

இந்த பட்டாசு ஆலையில் 10 அறைகளில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் பட்டாசு தயாரிக்கும் பணிகள் ஈடுபட்டு வருகின்றனர்

இன்று வழக்கம் போல பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த போது ஒரு அறையில் பட்டாசு உற்பத்திக்கான திரி தயாரித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது

அப்போது எதிர்பாராத விதமாக உராய்வினால் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது

இதில் அந்த அறை முழுவதும் பற்றி பலத்த சேதமடைந்துள்ளது

அப்போது அங்கு பணியில் இருந்த காயல்பட்டி பகுதியைச் சேர்ந்த வேலு (50) என்பவர் படுகாயம் அடைந்த நிலையில் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு  சிகிச்சைக்காக கொண்டு சேர்க்கப்பட்டுள்ளார் தீ விபத்து குறித்த தகவல் அறிந்த வெம்பக்கோட்டை மற்றும் சிவகாசி தீயணைப்பு வாகனங்கள் பட்டாசு தொழிற்சாலைக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தன

சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்

இந்த தீ விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔