Settings

முகப்பு/செய்திகள்/மாற்று கட்சியினர் 500 பேர் தங்களை தவெகவில் இணைத்து கொண்டனர்.
செய்திகள்

மாற்று கட்சியினர் 500 பேர் தங்களை தவெகவில் இணைத்து கொண்டனர்.

🕒 16 அக்., 2026, 11:35 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
மாற்று கட்சியினர் 500 பேர் தங்களை தவெகவில் இணைத்து கொண்டனர்.
✨

AI Highlights

  • •ஆம்பூர் அருகே மாற்று கட்சியினர் 500 பேர் தங்களை தவெகவில் இணைத்து கொண்டனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூரில் தமிழக வெற்றி கழக மாதனூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பார்த்தசாரதியின் பிறந்த நாளை முன்னிட்டு மாற்றுகட்சியினர் 500 பேர் தவெகவில் இணைப்பு விழா, மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்குதல் அன்னதானம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்சிகள் நடைபெற்றது. தவெகவினர் ஒன்றிய செயலாளர் பார்த்தசாரதியை ஊர்வலமாக அழைத்து சென்று அவரது பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாடினர்.இதில் சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் கிழக்கு மாவட்ட செயலாளர் நவீன்குமார் கலந்துகொண்டு மாதனூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பார்த்தசாரதி உடன் கேக் வெட்டிக் கொண்டாடினார். அதன் பின்னர் பள்ளி மாணவர்கள் 500 பேருக்கு இலவச நோட்டு புத்தகங்கள் மற்றும் எழுது பொருட்கள் வழங்கப்பட்டது.அப்போது மாற்று கட்சியை சேர்ந்த சுமார் 500 பேர் தங்களை தவெகவில் இணைத்து கொண்டனர்.பின்னர் 500 பேருக்கு ஆனந்தானம் வழங்கினர்.அதை தொடர்ந்து மாதனூர் அரசு மருத்துவனையில் உள்நோயாளிகளுக்கு உணவு,பால் ரொட்டி பழங்களை வழங்கினார்.மேலும் மருத்துவமனையில் வேலை செய்யும் ஊழியர்கள் அனைவருக்கும் உணவு வழங்கினார்.இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட இணை செயலாளர் சரவணன் உட்பட மாவட்ட நிர்வாகிகள் ,ஒன்றிய நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔