விருதுநகர் மாவட்டம் சிவகாசி ராதாகிருஷ்ணன் காலனியில் அக்கில் சுபேல் 30, என்பவருக்கு சொந்தமான காகித குடோன் செயல்பட்டு வருகிறது. அச்சகத்திலிருந்து வெளியாகும் கழிவு காகித தாள்களை மறுசுழற்சிக்காக செய்வதற்கான காகித முட்டைகள் தேக்கி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் குடோனில் அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
சம்பவம் அறிந்து சென்ற சிவகாசி தீயணைப்பு துறையினர் சுமார் 3 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காணப்பட்டது. தீ விபத்தில் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான காகிதம் மூட்டைகள் எரிந்து தீக்கரையானது. தீ விபத்துக்கான காரணம் குறித்து சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

