மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், நாட்டின் சுதந்திர தின விழாவைக் கொண்டாடும் விதமாகவும், விருதுநகரில் பெண்களுக்கான 'பிங்க் பிரைடு வாக்கத்தான் 2026' விழிப்புணர்வு நடைபயணம் இன்று சிறப்பாக நடைபெற்றது.
ஜேசிஐ விருதுநகர் பிளிஸ் மற்றும் விருதுநகர் நகராட்சி ஆகியவை இணைந்து இந்த விழிப்புணர்வு நடைபயணத்தை ஒருங்கிணைத்தன. நகரில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஹாக்கி மைதானத்தில் இன்று அதிகாலை தொடங்கப்பட்ட இந்நிகழ்வில், ஏராளமான பெண்களும் சிறுமிகளும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
நிகழ்வின் நிறைவாக, விழிப்புணர்வு நடைபயணத்தை வெற்றிகரமாக முடித்த பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

