விவசாயிகளின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் மற்றும் மேகதாது விவகாரத்தில் மெத்தனம் காட்டி தமிழகத்திற்கு உரிய தண்ணீரைப் பெற்றுத் தராத மாநில அரசைக் கண்டித்து, திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் அருகே அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் .கனசராஜா,சுப்ரமணியம் முன்னால் எம்பி. சௌந்தரராஜன் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் நிலையைப் பிரதிபலிக்கும் வகையில், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏர் கலப்பைகளுடன் பங்கேற்றனர். போராட்டத்தின் போது, விவசாயிகளின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும், அரசின் மெத்தனப் போக்கைக் கண்டித்தும் அவர்கள் தொடர் முழக்கங்களை எழுப்பினர். இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என திரளானோர் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்
செய்திகள்
தமிழக அரசை கண்டித்து ஏர் கலப்பையுடன் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
The News Outlook
🕒 14 ஆக., 2026, 08:15 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
