Settings

முகப்பு/நகரங்கள்/'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டம்: மாவட்ட ஆட்சியர் பிரசன்னா ராமசாமி நேரில் ஆய்வு!
நகரங்கள்

'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டம்: மாவட்ட ஆட்சியர் பிரசன்னா ராமசாமி நேரில் ஆய்வு!

🕒 18 நவ., 2026, 02:23 PM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு
'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டம்: மாவட்ட ஆட்சியர் பிரசன்னா ராமசாமி நேரில் ஆய்வு! - படம் 1 - The News Outlook
📸1 / 3
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (3)படத்தைத் தொடவும்
✨

AI Highlights

  • •கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டத்தில் 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரசன்னா ராமசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டத்தில் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் பல்வேறு துறைகள் சார்பாக நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரசன்னா ராமசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் ஒரு பகுதியாக, பாலராஜபுரம் ஊராட்சி, சின்னமாநாயக்கன்பட்டி பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் (MLACD) 2025–2026 நிதியாண்டின் கீழ் புதிதாக கட்டப்பட்டு வரும் சமுதாயக் கூடத்தின் கட்டுமானப் பணிகளை அவர் பார்வையிட்டார். தொடர்ந்து, மணவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளையும் ஆய்வு செய்தார்.

வேளாண்மைத் துறையின் சார்பில் அக்ரிஸ்டாக் திட்டத்தின் கீழ் நில உடைமையாளர்களுக்கு தனித்துவமான அடையாள அட்டை வழங்குவதற்காக நடைபெற்ற சிறப்பு முகாமினையும், பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சம்பா நெல் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, தேசிய பயிர் காப்பீட்டு இணையதளத்தில் பதிவு மற்றும் மறுபதிவு மேற்கொள்ளப்பட்டு வருவதையும் அவர் ஆய்வு செய்தார். மேலும், பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்த விவசாயிகளுக்கு பதிவு சான்றிதழ்களை வழங்கினார்.

சித்தலவாடி பகுதியில் மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பசுந்தாள் உர விதை விநியோகத் திட்டத்தில் தக்கைப்பூண்டு விதைப்பு செய்து மடக்கி உழவு செய்யப்பட்ட வயலையும், நெல் விதைப் பண்ணையையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மூலதன முதலீட்டுக்கான மாநிலங்களுக்கான சிறப்பு உதவித் திட்டத்தின் கீழ் ரூ.2.21 கோடி மதிப்பீட்டில் மணவாசி முடக்கு சாலை முதல் மாயனூர் சேங்கல் வரையிலான சாலை மேம்பாட்டுப் பணிகளையும் அவர் ஆய்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து, முனையனூர் சமத்துவபுரம் பகுதியில் கூடுதல் நாற்றங்கால் உருவாக்கும் பணிகளையும், மகாதானபுரம் தெற்கு கிராமத்தில் தோட்டக்கலைத் துறையின் சார்பில் விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டு வரும் நிரந்தரக் கல்தூண் பந்தல் பணிகளையும் பார்வையிட்டார். பொது விநியோகத் திட்டத்தின் கீழ் திருக்காம்புலியூர் நியாயவிலைக் கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் மற்றும் எடை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி, சேவகனூர் கால்நடை மருத்துவமனையில் செயல்பட்டு வரும் கால்நடை பிறப்பு கட்டுப்பாட்டு மையத்தையும், கிருஷ்ணராயபுரம் கால்நடை மருந்தகத்தில் உள்ள தடுப்பூசிகளின் இருப்பு குறித்தும் ஆய்வு செய்தார். மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் செயல்படும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர் விடுதிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் அடிப்படை வசதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, கிருஷ்ணராயபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்ற அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டத்தில், பொதுமக்களுக்கு செயல்படுத்தப்பட வேண்டிய புதிய வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும், “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பட்டா மாறுதல் முகாமில் விண்ணப்பித்த 6 பயனாளிகளுக்கு உடனடித் தீர்வாக பட்டா மாறுதலுக்கான உத்தரவு ஆணையை அவர் வழங்கினார். இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 44 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் து. தங்கவேல், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு. தனசேகரன், குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் சிவக்குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) நிர்மல் ராமசாமி உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
ஆம்பூர் நகராட்சியில் ஆட்சியரின் திடீர் ஆய்வு - பாதாளச் சாக்கடைத் திட்டம் குறித்து முக்கிய அறிவுறுத்தல்!நகரங்கள்

ஆம்பூர் நகராட்சியில் ஆட்சியரின் திடீர் ஆய்வு - பாதாளச் சாக்கடைத் திட்டம் குறித்து முக்கிய அறிவுறுத்தல்!

ARAVINDHAN🕒 நவ. 21
வாடிப்பட்டி அருகே இராமையன்பட்டி கோயில்களில் மகா கும்பாபிஷேக விழா கோலாகலம்!நகரங்கள்

வாடிப்பட்டி அருகே இராமையன்பட்டி கோயில்களில் மகா கும்பாபிஷேக விழா கோலாகலம்!

Vijay🕒 நவ. 21
மேலூர் நகராட்சி நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு!நகரங்கள்

மேலூர் நகராட்சி நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு!

Vijay🕒 நவ. 21
மணப்பாறையில் 3 நாள் வாக்காளர் சிறப்பு முகாம்: இன்று தொடக்கம்!நகரங்கள்

மணப்பாறையில் 3 நாள் வாக்காளர் சிறப்பு முகாம்: இன்று தொடக்கம்!

Ramachandran🕒 நவ. 21
கல்குவாரி நச்சுப் புகையால் மக்கள் அவதி - மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கைநகரங்கள்

கல்குவாரி நச்சுப் புகையால் மக்கள் அவதி - மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

VASANTHA🕒 நவ. 21
நெல்லை நயினார் குளத்தில் படகு சவாரி தொடக்கம்: விவசாயிகள் கடும் எதிர்ப்பு!செய்திகள்

நெல்லை நயினார் குளத்தில் படகு சவாரி தொடக்கம்: விவசாயிகள் கடும் எதிர்ப்பு!

Vijayaragavan🕒 நவ. 22
காதணி விழா சென்று திரும்பியபோது சோகம்: முசிறி விபத்தில் 8 தொழிலாளர்கள் உயிரிழப்பு!செய்திகள்

காதணி விழா சென்று திரும்பியபோது சோகம்: முசிறி விபத்தில் 8 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

MSD🕒 நவ. 22
பக்தி பரவசத்தில் நாகை மாவட்டம்! சொர்ணபுரீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம் விமரிசை!செய்திகள்

பக்தி பரவசத்தில் நாகை மாவட்டம்! சொர்ணபுரீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம் விமரிசை!

Sugumaran🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔