திருப்பத்தூர் மாவட்டத்தில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் இணையவழி குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை சார்பில் நடத்தப்பட்டன.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அக்க்ஷய் அனில் வாகரே அவர்களின் வழிகாட்டுதலின்பேரில், திருப்பத்தூர், புதுப்பேட்டை சாலை, ஜோலார்பேட்டை மற்றும் பொன்னேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்த விழிப்புணர்வு முகாம்கள் மேற்கொள்ளப்பட்டன.
பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளிடையே பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் காவல்துறை தரப்பில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

