Settings

முகப்பு/நகரங்கள்/குடிநீர், சாலை வசதிகள் கோரி ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஒன்றிய குழுக் கூட்டம்!
நகரங்கள்

குடிநீர், சாலை வசதிகள் கோரி ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஒன்றிய குழுக் கூட்டம்!

🕒 16 அக்., 2026, 06:34 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
குடிநீர், சாலை வசதிகள் கோரி ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஒன்றிய குழுக் கூட்டம்!
✨

AI Highlights

  • •திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய குழு தலைவர் சங்கீதா பாரி தலைமையில் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் சங்கீதா பாரி மற்றும் ஒன்றிய குழு துணை தலைவர் தலைமை தாங்கினர்.

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட பல்வேறு ஊராட்சிகளைச் சேர்ந்த ஒன்றிய குழு உறுப்பினர்கள், தங்களது பகுதிக்குட்பட்ட குடிநீர், சாலை வசதி மற்றும் மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோரிக்கைகள் மற்றும் பிரச்சினைகளை எடுத்துரைத்தனர்.

பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள் குறித்த இந்தக் கோரிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு துறைசார்ந்த அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் சம்மந்தப்பட்ட அனைத்துத் துறை அலுவலர்களும் கலந்துகொண்டு தங்களது துறை சார்ந்த விளக்கங்களை அளித்தனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔