திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அடுத்த கோம்பைபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ரெட்டியபட்டியில், ஊராட்சிக்கு சொந்தமான அரை ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு வீடு கட்டப்பட்டு வருவதைக் கண்டித்து, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆக்கிரமிப்பை உடனடியாக மீட்டு, அப்பகுதி பொதுப் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

