மக்களை நாடி, அவர்களின் குறைகளைக் கேட்டு உடனுக்குடன் தீர்வு காணும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வரும் 'உங்களைத் தேடி, உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ், அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் வட்டத்தில் அக்டோபர் 2026 மாதத்திற்கான முகாம் நடைபெற உள்ளது.
இந்தத் திட்டத்தின் வழிகாட்டுதல்களின்படி, மாவட்ட ஆட்சியர்கள் ஒவ்வொரு மாதமும் மூன்றாவது புதன்கிழமையன்று ஒரு குறிப்பிட்ட வட்டத்தில் தங்கி கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அரசு அலுவலகங்களை ஆய்வு செய்வதுடன், மக்களின் குறைகளைக் கேட்டு அரசின் சேவைகள் தங்குதடையின்றி மக்களைச் சென்றடைவதை உறுதி செய்வது இதன் நோக்கமாகும்.
அதன்படி, அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் வட்டத்தில் 21.10.2026 அன்று காலை 9.00 மணி முதல் 22.10.2026 காலை 9.00 மணி வரை இத்தி முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பல்வேறு துறை சார்ந்த மாவட்ட அளவிலான அலுவலர்கள் பங்கேற்று அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சேவைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை 'உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டம்' எனக் குறிப்பிட்டு 21.10.2026 வரை ஆண்டிமடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம். மேலும், அன்றைய தினம் மாலை 4.30 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் பொதுமக்களைச் சந்திக்கும் நிகழ்வின் போதும் நேரடியாக மனுக்களை வழங்கலாம்.
பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் முழுமையாகப் பயன்படுத்தி பயனடையுமாறு அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந. மிருணாளினி, இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

