திருவண்ணாமலையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக, அண்ணாமலையார் கோயில் பின்புறம் உள்ள தீப மலை சிற்றருவிகளில் வெள்ள நீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது.
தீப மலையின் பாறை இடுக்குகள் வழியாக பெருக்கெடுத்து ஓடும் இந்த நீர், பல இடங்களில் அருவிகளைப் போல கொட்டுவது பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக அமைந்துள்ளது.

