Settings

முகப்பு/நகரங்கள்/ஆயுதப்படை மைதானத்தில் காவலர்களுக்கு எஸ்பி பயிற்சி மற்றும் ஆய்வு
நகரங்கள்

ஆயுதப்படை மைதானத்தில் காவலர்களுக்கு எஸ்பி பயிற்சி மற்றும் ஆய்வு

🕒 24 அக்., 2026, 06:43 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
ஆயுதப்படை மைதானத்தில் காவலர்களுக்கு எஸ்பி பயிற்சி மற்றும் ஆய்வு
✨

AI Highlights

  • •திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காவலர்களின் கவாத்துப் பயிற்சி மற்றும் ஆயுதக் கிடங்குகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அக்க்ஷய் அனில் வாகரே நேரில் ஆய்வு செய்தார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காவலர்களின் கவாத்துப் பயிற்சி மற்றும் ஆயுதக் கிடங்குகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அக்க்ஷய் அனில் வாகரே நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் இன்று (24.10.2026), ஆயுதப்படைக் காவலர்களின் கவாத்துப் பயிற்சி மற்றும் ஆயுதங்களைக் கையாளுதல் தொடர்பான சிறப்புப் பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அக்க்ஷய் அனில் வாகரே நேரில் பார்வையிட்டு, காவலர்களுக்குத் தேவையான அறிவுரைகளை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து, ஆயுதப்படையில் உள்ள ஆயுதக் கிடங்குகளை அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ஆயுதக் கிடங்குகளில் பாதுகாப்பு நடைமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதை ஆய்வு செய்ததுடன், ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை முறையாகப் பராமரிப்பது தொடர்பாகவும் அறிவுரைகளை வழங்கினார். இந்த ஆய்வின்போது ஆயுதப்படைக் காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் உடனிருந்தனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔