திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அக்க்ஷய் அனில் வாகரே உத்தரவின் பேரில், வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரவீந்திரன் தலைமையில் இன்று (நவம்பர் 18, 2026) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பொதுமக்கள் நேரில் வருகை தந்து தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை அளித்தனர். இதன்படி மொத்தம் 49 மனுக்கள் பெறப்பட்டன.
பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி, விரைவில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.









