விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் நிறைவடைந்து தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
திருக்கோவிலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பருவமழையை எதிர்கொள்வது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்புப் பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசுப்பிரமணியன், ரமேஷ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், சுந்தர்ராஜன், செயற்பொறியாளர்கள் முருகன், குணசேகரன் மற்றும் ஊராட்சி செயலர்கள், அலுவலகப் பணியாளர்கள் பலர் உடனிருந்தனர்.

