விழுப்புரம் மாவட்டம் மருதூர் - சாலாமேடு ஏரிப் பகுதியில் குப்பைகள் கொட்டுவதைத் உடனடியாகத் தடுத்து, தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் என்று விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா.இலட்சுமணன் நகராட்சி அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார்.
விழுப்புரம் மத்திய மாவட்ட கழக பொறுப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் இரா.இலட்சுமணன் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ஏரிப் பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதைக் சுட்டிக் காட்டி, அதனை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும், ஏற்கனவே கொட்டப்பட்ட குப்பைகளை விரைந்து அகற்ற வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டார்.
மேலும், அப்பகுதியில் மீண்டும் குப்பைகள் கொட்டப்படுவதைத் தடுக்கும் வகையில் எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு விளம்பரப் பலகைகளை உடனடியாக அமைக்க வேண்டும் என்றும் அவர் நகராட்சி அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, விழுப்புரம் கிழக்கு நகர கழக பொறுப்பாளர் எஸ். வெற்றிவேல், கோலியனூர் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் பி. தெய்வசிகாமணி மற்றும் கழகக் கட்சியினர் உடன் இருந்தனர்.

