Settings

முகப்பு/நகரங்கள்/குளமாக இருந்த பகுதி குப்பை மேடானது: நடவடிக்கை எடுக்குமா நகராட்சி?
நகரங்கள்

குளமாக இருந்த பகுதி குப்பை மேடானது: நடவடிக்கை எடுக்குமா நகராட்சி?

🕒 23 அக்., 2026, 06:47 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
குளமாக இருந்த பகுதி குப்பை மேடானது: நடவடிக்கை எடுக்குமா நகராட்சி?
✨

AI Highlights

  • •விழுப்புரம் செஞ்சி சாலை பாப்பான் குளம் பகுதியில் இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விழுப்புரம் செஞ்சி சாலையில் உள்ள பாப்பான்குளம் பகுதியில், இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுவதால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதோடு, நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஒரு காலத்தில் பெரிய குளமாக விளங்கிய இப்பகுதி, தற்போது ஆடு, மாடு மற்றும் கோழி வதைக்கூடங்களின் கழிவுகளை அகற்றும் இடமாக மாறி வருவதாக அப்பகுதிவாசிகள் கவலை தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் வசிப்பது கடினமாக இருப்பதாகவும், அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து சம்பந்தப்பட்ட சுகாதாரத்துறை மற்றும் விழுப்புரம் நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். வரவிருக்கும் வடகிழக்கு பருவமழையை கருத்தில் கொண்டு, தொற்றுநோய் பரவாமல் இருக்க உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔