மதுரை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு பெய்த பரவலான கனமழை காரணமாக, மாநகராட்சிக்கு உட்பட்ட ரேஸ் கோர்ஸ் பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் சாலைகள் வெள்ளக்காடாகக் காட்சியளிப்பதுடன், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக அகற்றுமாறு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

