Settings

முகப்பு/நகரங்கள்/கையும் களவுமாக சிக்கிய திருடன்! பொதுமக்களின் அதிரடி நடவடிக்கை!
நகரங்கள்

கையும் களவுமாக சிக்கிய திருடன்! பொதுமக்களின் அதிரடி நடவடிக்கை!

🕒 20 அக்., 2026, 11:38 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
கையும் களவுமாக சிக்கிய திருடன்! பொதுமக்களின் அதிரடி நடவடிக்கை!
✨

AI Highlights

  • •திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த மாம்பாக்கம் கிராமத்தில் வீடுகளில் சமையல் எரிவாயு சிலிண்டர்களைத் திருடிய வாலிபரை பொதுமக்கள் கையும் களவுமாகப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் வீடுகளில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் தொடர்ந்து திருடப்பட்டு வந்த நிலையில், சிலிண்டரைத் திருட முயன்ற வாலிபர் ஒருவர் பொதுமக்களால் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம் பெரியகடம்பூர், சின்னகடம்பூர் மற்றும் மாம்பாக்கம் ஆகிய கிராமங்களில் கடந்த சில மாதங்களாக வீடுகளில் இருந்த காஸ் சிலிண்டர்கள் மர்மமான முறையில் திருடு போய் வந்தன. இந்நிலையில், நேற்று முன்தினம் மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சந்திரன் (55) என்பவரது வீட்டின் வளாகத்தில் இருந்த காஸ் சிலிண்டரை வாலிபர் ஒருவர் திருட முயன்றுள்ளார். இதைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்த வாலிபரை மடக்கிப் பிடித்த சந்திரன், இதுகுறித்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அந்த நபரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில், காஸ் சிலிண்டர் திருட்டில் ஈடுபட்டது ஆர்கே பேட்டை தாலுகா பெரியநாகபூண்டி கிராமத்தைச் சேர்ந்த உதயகுமார் (34) என்பது தெரியவந்தது. இதனையடுத்து, உதயகுமாரைக் கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔